செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (18:33 IST)

இந்தியன் 2' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் !

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. ஆனால் திடீரென இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படம் டிராப் என கூறப்பட்டது
 
ஆனால் அதன் பின்னர் தயாரிப்பு தரப்பிற்கும் இயக்குனர் ஷங்கர் தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் இந்த படத்தின் பணிகள் ஆரம்பமாகின. இதனை அடுத்து இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியவர்களோடு ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த நிலையில் இந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத்திசிங், பிரியா பவானிசங்கர் ஆகியோர்களும் கலந்துகொண்டனர். விரைவில் கமலஹாசனும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இவர் பிளாஷ்பேக் காட்சியில் தோன்ற உள்ளதாகவும், சுதந்திரத்துக்கு முந்தைய காட்சியில் கமல்ஹாசனின் இளவயது நண்பராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனியின் கெட்டப் இந்த படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவருக்கு இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் சமுத்திரக்கனி இந்த படத்தின் படப்பிடிப்பில் அடுத்த மாதம் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் புதிய வரவால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது