1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Central minister L murugan get three departments

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு என்னென்ன துறைகள்?

எல் முருகன்
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு இணை அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த தகவல் சற்றுமுன் வெளிவந்துள்ளது. எல் முருகனுக்கு மூன்று முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த துறைகள் பின்வருவன ஆகும் 
 
1. மீன்வளம்
 
2.  தகவல் மற்றும் ஒலிபரப்பு
 
3. கால்நடை மற்றும் பால்வளம் 
 
மேற்கண்ட மூன்று துறைகளும் முக்கிய துறைகள் என்பதாலும் தமிழகத்திற்கு அதிக தேவைப்படும் துறைகள் என்பதாலும் எல் முருகன் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
எல் முருகன் மத்திய அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்தால் தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது மத்திய அமைச்சர் பதவியின் மூலம் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தது போல் எல் முருகனும் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
துபாய் துறைமுகத்தில் வெடித்து சிதறிய கண்டெய்னர் கப்பல்! – ஷாக்கிங் வீடியோ!