திராவிட அரசியல் காலத்தின் தேவையாக இருந்து தனிநபர்களின் தேவையாக மாறியுள்ளது – திமுகவை வம்பிழுக்கும் கமல் !

Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (07:32 IST)
அல்ஜீப்ரா கிளப் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல் திமுக வை சீண்டும் விதமாக பேசியுள்ளார்.

ஜனவரி 9 ஆம் தேதி சென்னையில் தி அல்ஜிப்ரா- கிளப் நடத்திய இந்து நிறுவனர் என்.ராமுடன், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

அப்போது திராவிட அரசியல் பற்றி பேசிய கமல், ‘ஒரு காலத்தில் திராவிட அரசியல் அன்றைய தேவையாக இருந்தது. காலத்தின் தேவையாக இருந்தது இப்போது சில தனிநபர்களின் தேவையாக மாறியுள்ளது. அது இப்போது சரியான திசையில் செலுத்தப்பட வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்த கேள்விக்கு அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

 இதில் மேலும் படிக்கவும் :