தெறி படத்தில் வந்த பேபியா இவர்? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Last Modified வியாழன், 9 ஜனவரி 2020 (20:51 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ’தெறி’ திரைப்படத்தில் மீனாவின் மகள் நைனிகா விஜய்யின் மகளாக நடித்து இருப்பார். அவர் விஜய்யை செல்லமாக பேபி பேபி என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது இந்த படத்தில் நைனிகா நடிக்கும்போது 5 வயது குழந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தர்பார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் மீனா தனது மகள் நைனிகா உடன் தர்பார் திரைப்படத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவரை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ள்ளனர்

ஐந்து வயது குழந்தையாக இருந்த நைனிகா தற்போது கிட்டத்தட்ட பெரிய பெண்ணாக மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த புகைப்படத்தில் மீனாவுடன் நடிகை குஷ்புவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனா தனது மகளுடன் தர்பார் படத்தை ரசித்துப் பார்த்து, படம் சூப்பராக இருந்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :