ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (12:22 IST)

கமலின் கட்சிப் பெயர் பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது; கமலை சீண்டும் சீமான்

கமலின் கட்சிப் பெயரின் விளக்கமானது சுத்த பைத்தியக்காரத்தனத்தை குறிக்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளரான சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.  
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது கட்சி பெயர் குறித்து விளக்கமளித்த கமல் தாம் வலதுசாரியும் இல்லை இடதுசாரியும் இல்லை, இடையில் மய்யம் எனக் குறிப்பிட்டார்.
 
இதுதொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலின் கட்சிப் பெயர் குறித்த விளக்கம் சுத்த பைத்தியக்காரத்தனம் என்று கூறியிருக்கிறார். சீமானின் இந்த கருத்திற்கு கமலின் ஆதரவாளர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.