திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (15:15 IST)

எலிப்பொந்தில் இருந்தவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகின்றனர். அன்பழகன்

தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் திடீரென அரசியல் பிரவேசம் செய்துள்ளதால்  பலரது முதல்வர் கனவு கானல் நீராகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் அவரது மரணத்திற்கு பின்னர் ஆட்சியை எளிதில் பிடித்துவிடலாம் என்ற கனவில் இருந்த நிலையில் அந்த கனவை கலைக்கும் வகையில் திடீரென இருவரும் அரசியல் பிரவேசம் செய்கின்றனர்.

எனவே பல அரசியல்வாதிகள் இருவரையும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். சற்று நேரத்திற்கு முன்னர் தமிழக அரசியல் வானில் புதிதாக பறக்கத் தொடங்கியுள்ள அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் விரைவில் வெடித்துச் சிதறிவிடும் என கமல், ரஜினியை மறைமுகமாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதை பார்த்தோம்

இந்த நிலையில் புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், 'ஜெயலலிதா இருந்தவரை எலிப்பொந்துகளில் இருந்தவர்கள், தற்போது புற்றீசல் போல் கட்சிகளை துவங்குவதாக கூறியுள்ளார்.