திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (11:19 IST)

கமல் எனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார்: கவுதமி

நடிகர் கமல்ஹாசனுடன் சில ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். அதன் பின்னர் கமல்ஹாசனுடன் அவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் கமலுடன் இணைத்து கவுதமி குறித்த வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் கமலுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள கவுதமி, அவர் தனக்கு சம்பள பாக்கியும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கமலுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. கமல் அரசியலை நான் ஆதரிக்கவும் இல்லை. என்னை, கமலுடன் உடன் ஒப்பிட்டு பேசுவது மனவருத்தம் அளிக்கிறது. மேலும் தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி எனக்கு, அவர் இன்னும் சம்பளம் வழங்கவில்லை' என்று கூறியுள்ளார்

தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளமே தராத கமல், எப்படி தமிழக மக்களின் தேவையை பூர்த்தி செய்வார்? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.