ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 5 டிசம்பர் 2020 (15:10 IST)

ரஜினி டிசம்பர் -31 ஆம் தேதி முக்கிய அறிவிப்பு – தமிழருவி மணியன்

சமீபத்தில்  தனது புதிய கட்சி குறித்து அறிவித்தார் ரஜினிகாந்த்.இந்நிலையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி தனது புதிய கட்சி தொடங்கவுள்ள தேதியை அவர் அறிவிப்பார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் காத்திருப்புகளுக்குப் பின் தனது ரசிகர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுக்கு உள்ள வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற கருத்து பொதுவெளியில் நிலவுகிறது.

இருப்பினும் ரஜினியுடன் கூட்டணி கை கோர்க்க அவரது நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கட்சிகளை பேச்சுவார்த்தை நடத்தாலம் என்ற பேச்சும்  நிலவுகிறது.

இதுஒருபுறமிருக்க அவர் பாஜகவின் நெருக்கடியலதான் அரசியல் கட்சித் தொடங்கவுள்ளார் என்ற குற்றச்சாட்டுநிலவுகிறது.

இந்நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் மேற்பார்வையாளரான  தமிழருவி மணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது:

நடிகர் ரஜினியால் தமிழகத்தில் பேரெழுச்சி உருவாகும். டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினி தனது கட்சி குறித்து அறிவிப்பார். அதன்பிறகு காந்திய மக்கள் கட்சி ரஜினி கட்சியுடன் இணையும் எனத் தெரிவித்துள்ளார். #Rajinikanth #Tamilaruvimaniyan