திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (16:47 IST)

சூரப்பா விவகாரத்தில் உண்மை தெரியாமல் பேசுகிறார் கமல்: அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அடிப்படையில் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் கமிஷன் அமைத்து விசாரணை செய்து வருகிறது
 
இந்த கமிஷன் விசாரணை செய்து விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூரப்பாவுக்கு ஆதரவாக நேற்று கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
நேர்மையான சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது தவறு என்றும் சூரப்பாவுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பேன் என்றும் மக்கள் நீதி மையமும் குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறினார் 
 
இதனை அடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கமல்ஹாசனின் இந்த வீடியோவிற்கு பதிலளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவர் கூறினார். கட்சியை ஆரம்பித்து விட்டோம் என்பதற்காக எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை என்றும் அமைச்சர் அன்பழகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது