1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM gives press meet after meeting governor

திருப்திகரமாக பதில் அளித்தோம்: ஆளுநரை சந்தித்த பூரிப்பில் முதல்வர்!

ஆளுநர் சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் பிறகு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கொடுத்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காமல் இருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்து வருகிறது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவது போராட்டம் நடக்க தொடங்கியுள்ளது. இதனிடைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை நேரில் சென்று சந்தித்தார். 
 
தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்துள்ளனர். 
 
இது குறித்து முதல்வர் கூறியதாவது, தமிழக போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் பேசினோம். தமிழக நிலவரங்களை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். எங்களது பதில்கள் அவருக்கு திருப்திகரமாக இருந்ததால் ஆளுநர் திருப்தி அடைந்தார் என்று பூரிப்புடன் பதில் அளித்தார். 
அடுத்த கட்டுரையில்
நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆந்திராவுடன் கைகோற்குமா தமிழகம்?