செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (13:41 IST)

நீங்க விசில் அடிக்க தயாரா? மையம்விசில் செயலியை அறிமுகப்படுத்திய கமல்

சென்னை தி.நகர் நற்பணி மன்றத்தில் உறையாற்றிய நடிகர் கமல்ஹாசன் தனது செயல்பாடுகளை முன்னெடுக்க மையம்விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் தனது 63வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். காலை இலவச மருத்துவ முகாமை ஆவடியில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 550 இடங்களில் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து தற்போது தி.நகரில் உள்ள நற்பணி மன்றத்தில் பேசியவர் மையம்விசில் என்ற ஆப் மற்றும் ஹேஸ்டேக் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
இதன்மூலம் மக்கள் தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களுக்கு குரல் கொடுக்கலாம் அல்லது அதுபற்றி எடுத்துரைக்கலாம் என்றும் கமல் தெரிவித்துள்ளார். விசில் அடித்தால்தான் ரயில் வண்டி கூட புறப்படும். அதுபோன்று மக்கள் இந்த மையம்விசில் ஆப்பை பயன்படுத்தி சுட்டிக்காட்ட பயன்படுத்தலாம். எனக்கு எதிராகவும் எனது செயல்பாடுகளை இதன்மூலம் தெரிவிக்கலாம். நீங்கள் விசில் அடிக்க தயாரா? என கூறியுள்ளார்.
 
மேலும் முக்கியமாக இந்த மையம்விசில் ஆப் அனைவரிடமும் சென்று சேர்வதற்கான ஒரு தளம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.