திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (12:00 IST)

அறிவாளி உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி; அசத்தும் கமல் ரசிகர்கள்

உலகம் அறிந்த அறிவாளி உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி என கமலை அவரது ரசிகர்கள் வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


 

 
நடிகர் கமல் ஹாசன் இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அரசியல் களமிறங்க போவதாக அறிவித்த நாள் முதல் அவரது ரசிகர்கள் எப்போ என காத்துக்கொண்டுகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழகம் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 
 
அதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் ரசிக்கும்படி உள்ளது. உலகம் அறிந்த அறிவாளி உனக்காக ஏங்குது தலைமை செயலக நாற்காலி என உள்ளது.
 
அவடியில் இலவச மருத்துவ முகாமை கமல் துவக்கி வைத்துள்ளார். மழை காலம் என்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உதவி அவசியம் என்பதால் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளோம் என கமல் கூறியுள்ளார்.
 
மேலும் இலவச மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 550 இடங்களில் நடைபெறுகிறது.