திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (11:11 IST)

"நடிகன்னா உனக்கு ஓட்டு போடுவாங்களா?; கமலை சீண்டும் வெங்கட் பிரபு

நடிகர் ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அறிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வருவார் என சில ஆண்டுகளாகவே கூரப்பட்டு வரும் நிலையில் இன்னும் அவர் வந்தபாடில்லை. ஆனால், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதென  முடிவெடுத்துவிட்டார்.

 
ஆனால், தற்போது வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் ‘நடிகன்னா  உனக்கு ஓட்டு போட்டுவிடுவாங்களா?; நீ என்ன எம்.ஜி.ஆரா? என ஒரு டைலாக் வருகிறது. இந்த டைலாக் கமலை விமர்சிப்பது  போல் உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.



இந்நிலையில்  இது குறித்து கயல் பட நடிகர் சந்திரன் நேரடியாக தனது ட்விட்டர் பக்கத்தில்  ‘உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை என ட்வீட் செய்துள்ளார். மேலும் "ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?" என கேட்டு ட்வீட் செய்துள்ளார்.