திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:19 IST)

ஜவஹர்லால் பிறந்த நாள்: நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து..!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த நாளை குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜவஹர்லால் பிறந்த நாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து செய்தியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டு வந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்.

Edited by Siva