திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (16:40 IST)

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்! - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

udhayakumar
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் சோழவந்தான் நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்  பேசியதாவது:


 
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் மேலும் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி  தலைமையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கக்கூடிய சூழ்நிலையை  உருவாகும்.

அதற்கு தேனி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி முதல் வெற்றியாக பதிவு செய்யப்படும் அதற்கு சோழவந்தான் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போதைய திமுக அரசு நிறுத்திவிட்டது இதனால் திமுக ஆட்சி மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் 4 ஆண்டு கால ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு திமுக ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

தேர்தல் எந்த நேரத்தில் நடந்தாலும் எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள் ஆகையால் விரைவில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய மாற்றம் தமிழகத்தில் நடைபெறும் என்று பேசினார்.

கூட்டத்திற்கு வாடிபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.