1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (17:29 IST)

சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது: கமல்ஹாசன் டுவீட்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை தைரியமாக ஆவேசமாகவும் தெரிவித்து வருகிறார் 
 
மேலும் தமிழகத்திற்கு தேவையான உரிமைகளைப் பெறுவது குறித்தும் அவரது டுவிட்டுக்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய அவருடைய டுவிட்டுக்கள் எல்லாம் தெறிக்க வைத்து வருகின்றன என்பதும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமூக நீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலையும் அனுமதிக்க முடியாது என்பது குறித்த ஒரு ட்வீட்டை கமலஹாசன் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்களிப்பை மத்திய அரசு குறைக்கக் கூடாது. மாநில அரசு கோரும் தொகையை உடனடியாகக் கொடுக்க வேண்டும். சமூகநீதியை நோக்கிய பாதையில் சிறு விலகலும் அனுமதிக்க முடியாதது.