கோவிலில் கொள்ளை அடிப்போர்களை தாக்குவோம்: கமல் ஆவேச டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த பரபரப்பான செய்தி வெளியானால் உடனே கமலிடம் இருந்து ஒரு ஆவேச டுவீட் வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று ரஜினியின் சகோதரர், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வரும் என்று கூறியதை அடுத்து கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் ஒரு ஆவேச கருத்தை தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது' என்று பதிவு செய்துள்ளார்
கோவிலில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருவதும், சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தற்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இந்த டுவிட்டை பதிவு செய்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.