1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (19:02 IST)

ஆர்கே நகர் இடைதேர்தலில் விஷாலை நிறுத்த திட்டம்; கமல் வியூகம்?

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் வருகை மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கமல்  கட்சி ஆரம்பித்தால் திமுக மற்றும் அதிமுகவிற்கு அதிகம் சவாலாக இருப்பார் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறும் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் விஷாலை நிறுத்தி அரசியலில் ஆழம் பார்க்க கமல் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. நேற்று வெளியிட்ட ட்வீட்டில் விரைவில் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை  அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.
 
இந்நிலையில் ஆர்கே நகர் இடைதேர்தலில் விஷாலை களம் இறக்க கமல் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின்  ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் எடுத்த ஒரு சர்வேயில், வியூகம் அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவதில் விஷால்  திறமையானவர். எனவே கமல் விஷாலை களம் இறக்க முயற்சிக்கிறார் என்கிறார்கள். மேலும் விஷாலை தங்கள் பக்கம்  இழுக்க தினகரன் தரப்பும் முயற்சித்து வருகிறதாம். ஆனால் இது அரசியலுக்கு வருவதற்கான தகுந்த நேரம் இல்லை என்று  விஷாலுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு அறிவுரை கூறுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.