வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2017 (12:23 IST)

அதிமுக, திமுகவிற்கு கமல்ஹாசன் சவாலாக இருப்பார் - கருத்து கணிப்பில் தகவல்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கினால் அவர் அதிமுக, திமுக கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்பது ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.


 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகளுக்கு பொதுமக்கள் பதில் அளித்தனர். அதில், கமல், ரஜினி, விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கும் பட்சத்தில், இதில், அதிமுகவிற்கு சவாலாக இருக்கும் நடிகர் யார்? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் என 45.3 சதவீத பேரும், ரஜினி என 18.2 சதவீதமும், விஜய் என 14.5 சதவீதமும் மற்றவர்கள் என 22 சதவீதம் பேரும் பதிலளித்தனர்.
 
அதேபோல், திமுகவிற்கு யார் சவாலாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு கமல்ஹாசன் என 35.5 சதவீதமும், ரஜினி என 22.8 சதவீதமும், விஜய் என 16.5 சதவீதமும், மற்றவர்கள் என 25.2 சதவீதமும் பதிலளித்தனர்.
 
இதிலிருந்து, நடிகர் கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.  குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. ஏனெனில், ஆண்களை விட அதிகம் பெண்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பில் பதிலளித்துள்ளனர்.