திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 29 நவம்பர் 2017 (17:54 IST)

என்னால இதை நம்பவே முடியல; ட்வீட் செய்த கவுதம் கார்த்திக்

கவுதம் கார்த்திக் தனது அப்பா கார்த்திக்குடன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடப்பது உண்மையா இல்லையா என்பதை நம்ப முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளார் கவுதம் கார்த்திக். திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது. 
இந்த படத்தில் கவுதமுடன் அவரது தந்தை கார்த்திக்கும் நடிக்கிறார். அப்பாவும், மகனும் முதல் முறையாக ஒன்றாக சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்தினை கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் கவுதம் கார்த்திக் ட்வீட்டரில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. என் தந்தையுடன் நடிக்கிறேன் என நம்பவே  முடியவில்லை. யாராவது என்னை கிள்ளுங்களேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மிஸ்டர் சந்திரமௌலி படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. செட்டில் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படம் உறுதியாக மாபெரும் வெற்றி பெறும், வாழ்த்துக்கள். திரு பட்டைய கெளப்புங்க என இயக்குனர் சுசீந்திரன்  வாழ்த்தியுள்ளார்.