வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (12:36 IST)

சட்டத்திற்கு உட்பட்டு பிரசாரத்தை செய்வேன் - கமல்ஹாசன்

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக வெளி வந்துள்ள தகவலை அடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு மதுரை செல்லும் முன் அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார் 
 
அப்போது அவர் கூறியதாவது: உங்கள் வாழ்த்துக்களோடு நான் பிரச்சாரத்துக்கு புறப்படுகிறேன். பல இடங்களில் அனுமதி கொடுத்திருக்கிறார்கள், நகரங்களுக்குள் எங்களுக்கு அனுமதி கடைசி நிமிடத்தில் மறுத்து இருக்கின்றார்கள், பார்ப்போம் 
 
எங்கள் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்பட வேண்டிய முறையில் செயல்படுவோம். உங்கள் வாழ்த்துக்களுடன் இந்த பிரச்சாரத்தை நான் தொடங்குகிறேன் 
 
தமிழகம் தற்போது சீரழிக்கப்பட்டு விட்டது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே சீர்திருத்தப்பட்ட புதிய தமிழகத்தை உருவாக்குவதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம் என்று அவர் கூறினார்.  தமிழகத்தைச் சீரழித்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். அதை நினைத்து புலம்பி கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று. இனி செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தான் நாங்கள் பேச உள்ளோம் என்று கமலஹாசன் கூறினார்