புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 12 டிசம்பர் 2020 (18:48 IST)

திரை மேதையின் மரணம் மீப்பெரும் இழப்பு… மாமேதைக்கு அஞ்சலி- கமல்ஹாசன்

பிரபல திரைப்பட இயக்குநர் பிரபல உலக சினிமா இயக்குனர் கிம் கி டுக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரிய இயக்குனரான கிம் கி டுக் மற்றும் அவரது படத்திற்கு உலகளவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரது இயக்கத்தில் வெளியான தி நெட், ஹ்யூமன் ஸ்பேஸ் டைம், காட் செண்ட், மொபியஸ் உள்ளிட்ட பல படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை பெற்றவை.

கடந்த மாதம் 20ம் தேதி தென் கொரியாவில் உள்ள லாட்வியாவில் இடம் வாங்குவதற்காக சென்றுள்ளார் கிம் கி டுக். கடற்கரை அருகே வீடு வாங்க ஒப்பந்தங்களை மேற்கொண்ட அவர் ஆவணம் சரிபார்த்தலுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு கொரோனா இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சக நண்பரும் இயக்குனருமான விட்டாலி மேன்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  அவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உலகத் தரமான திரைப்படங்களை ஈந்து சினிமா ரசனையை மேம்படுத்திய திரை மேதை கிம் கி டுக் மரணம் மீப்பெரும் இழப்பு. மாமேதைக்கு அஞ்சலி எனத் தெரிவித்துள்ளார்.