1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (09:48 IST)

யாரை காக்க இவ்ளோ பிரம்மாண்டமான நாடாளுமன்றம்? – கமல்ஹாசன் கேள்வி!

இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கியுள்ள நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் தற்போது நாடு உள்ள சிக்கலான நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அவசியமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே....” என கேள்வி எழுப்பியுள்ளார்.