1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:45 IST)

மாநகராட்சி தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டி: காங்கிரஸூடன் கூட்டணியா?

சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
திமுக அதிமுக என இரண்டு பிரமாண்ட கூட்டணியை எதிர்த்து போட்டியிட தயங்கிய மக்கள் நீதி மையம் தற்போது திமுக கூட்டணியிலும், அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் கமலஹாசன் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் இருவரும் தலா 50 சதவீதம் பதவியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை பொறுமை காப்போம்