1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (12:12 IST)

காவல்துறையினர் என்னை துன்புறுத்துகின்றனர்: கமல்ஹாசன் திடுக் புகார்

சமீபத்தில் ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்து மூன்று உயிர்கள் பலியான விவகாரம் குறித்து தன்னை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்தி  வருகின்றனர் என்று நடிகர் கமலஹாசன் திடுக்கிடும் புகார் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து குறித்து ஏற்கனவே தன்னிடம் போலீசார் மூன்று மணி நேரம் விசாரணை செய்துவிட்ட நிலையில் தற்போது அந்த விபத்து எப்படி நடந்தது என்பதை நடித்து காட்ட வேண்டும் என்று காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்த வழக்கை அவசர வழக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இன்று மாலை இந்த மனு விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. கமலஹாசன் போன்ற ஒரு மாஸ் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவருக்கே காவல்துறையினரால் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது