புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:42 IST)

தேர்தல் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம்: கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன 
 
ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது என்பதும் விருப்ப மனுவை பெற்று வருவது குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இன்று காலை அதிமுக தனது கட்சியினருக்கு விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்த நிலையில் சற்று முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் இது குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
2021 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட பிப்ரவரி 21ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் 
 
மேலும் இதுகுறித்து அவர் ஒரு நீண்ட அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.