உயிரே உறவே தமிழே...கமல்ஹாசன் பிரமாண்ட மாநாட்டுக்கு அழைப்பு !!
நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:
சீரமைப்போம் தமிழகத்தை என்ற பொருண்மையில் நமது கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறை இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.அதனால் மாநாட்டு நிகழ்வை மார்ச் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கிறோம்.
பிப்ரவரி 21 ஆம்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆம் ஆண்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெறும்.மார்ச் 7 ஆம் தேதி சீரமைப்போம் தமிழகத்தைமக்கள் நீதி மய்யத்தில் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஓரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் நடைபெறும்.
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.