1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 24 நவம்பர் 2022 (08:15 IST)

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆச்சு>

kamal
உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகர் கமல்ஹாசன் நேற்று ஐதராபாத் சென்று இந்த நிலையில் அங்கிருந்து சென்னை திரும்பிய அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
மேலும் மருத்துவர்கள் அவரை ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva