செவ்வாய், 21 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:32 IST)

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகிறாரா சினேகன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின்போது கமல்ஹாசனுக்கு நெருக்கமான கவிஞர் சினேகன், அதன்பின்னர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்து நிர்வாகியாகவும் மாறினார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

மேலும் சினேகனுக்கு தன் தலைமையில் திருமணமும் நடத்திவைத்தார். இந்நிலையில் இப்போது சினேகனுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும், அதனால் சினேகன் கட்சியை விட்டி வெளியேறி சினிமாவில் முழுக் கவனம் செலுத்த ஆலோசித்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.