1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (15:39 IST)

தாமதம் ஆகும் கமல்-சிவகார்த்திகேயன் திரைப்படம்! பின்னணி என்ன?

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.  இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அந்த வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஷூட்டிங் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தாமதத்துக்குக் காரணம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் ஷூட்டிங் தாமதம் ஆவதுதான் என சொல்லப்படுகிறது.