1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (09:20 IST)

சோ இடத்தை கமல்ஹாசன் நிரப்புவார்: ஆனந்தராஜ்

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, இரு அணியையும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் நடிகர் ஆனந்தராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


 


அப்போது விரைவில் அதிமுக ஒரே அணியாக மாறும் என்றும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தது போல், தினகரன் அணியும் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஆனந்தராஜ் கூறினார்

மேலும் கமல்ஹாசன் களத்தில் இறங்கி வேலை செய்தாலும், அவர் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவாரா? என்று ஆரூடம் சொல்ல நான் தயாராக இல்லை என்றும், அவர் மறைந்த அரசியல் விமர்சகர் சோ இடத்தை நிரப்புவார் என்று நான் எதிர்பார்க்கின்றேன்' என்றும் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்தார்