1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (08:56 IST)

நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்... கோரஸாய் முடிவெடுத்த மநீம!!

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் வரும் சட்டமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக வேட்பாளர்களை நியமிப்பது, கூட்டணி உள்ளிட்ட அனைத்திலும் கமல்ஹாசன் தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கான முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
 
இந்நிலையில், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.