காங். - மநீம கூட்டணி? கமல் போடும் கணக்கு என்ன??
கே.எஸ்.அழகிரியின் அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என கமலிடன் கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூட்டணிக்கு தொடர்ந்து கமலை அழைத்து வருகிறார். எனவே இது குறித்து செய்தியாளர்கள் உங்கள் தந்தையும் காங்கிரஸ்காரர்தானே. கே.எஸ்.அழகிரியின் அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என கமலிடன் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கமல், என் தந்தை காங்கிரஸ் காரர்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரசின் அன்பை பெற்றவர்கள் நாங்கள். அதே நேரத்தில் காங்கிரசுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்குமா என்பது பற்றி தெரிவிக்கக்கூடிய நேரம் இதுவல்ல என மழுப்பல் பதிலை கூறியுள்ளார்.