ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (18:15 IST)

சிவாஜி இல்லத்தில் அறுசுவை விருந்து... கண் கலங்கிய கமல்ஹாசன் ! உருக்கமான டுவீட்

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.  சிவாஜிக்கு பிறகு நடிப்பின் அடையாளமாக தமிழ்சினிமாவில் திகழ்ந்துகொண்டுள்ளார். கடந்த வருடம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அவர் தொடங்கியதன் வாயிலாக அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் இன்று சிவாஜியின் குடும்பத்தார் நடிகர்  பிரபு மற்றும் ராம்குமாரின் சார்பில் அன்னை இல்லத்தில் கமல்ஹாசனுக்கு விருந்தளிக்கபட்டது.  
 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ;
 
அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னை கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.