செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (13:00 IST)

நீங்கள் ஆசைப்பட்டால் நான் முதல்வர் – கல்லூரியில் கமல் கலந்துரையாடல் …

கமல் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடல்களை நிகழ்த்தி வருகிறார்.

ரஜினி வருகிறேன் வருகிறேன் என்று நீண்டகாலமாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியலில் இறங்கி கட்சியையும் ஆரம்பித்து மக்கள் பணிகளில் தீவிரமாக இறங்கி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார் கமல்.

கட்சியை ஆரம்பித்ததும் சும்மா இல்லாமல் தமிழகம் முழுவதும் மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார். கிராமங்களுக்கும் சென்று கிராம சபைக் கூட்டத்தின் அவசியம் பற்றி விளக்கி வருகிறார். இதையடுத்து அடுத்த கட்டமாக கல்லூரி மாணவர்களை சந்தித்து அரசியல் விவாதங்களை நடத்தி வருகிறார்.

நேற்று வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது ’வாக்கு ஒன்றுதான் உங்கள் முதலீடு. எனவே சின்னத்தைப் பார்த்து வாக்களிக்காதீர்கள். எந்த கட்சி மக்களுக்காக உழைக்கும் எனத் தெரிந்துகொண்டு வாக்களியுங்கள்’ எனக் கூறினார்.

கேள்வி பதிலின் போது ஒரு மாணவி ‘உங்களை முதல்வராகப் பார்க்க வேண்டுமென்பதே எங்கள் ஆசை’ எனக் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியாக பதில் அளித்த கமல் ‘நீங்கள், நான் என்னவாக ஆக வேண்டுமென விரும்புகிறீர்களோ அதற்கு நான் தயார். உங்கள் முதல்வரை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்’ எனக் கூறினார்.