தமிழன் என்பதற்கான தகுதி என்ன? கமல்ஹாசன் விளக்கம்

Last Modified வெள்ளி, 25 ஜனவரி 2019 (18:23 IST)
தமிழ்நாட்டை தமிழரே ஆளவேண்டும், மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் தங்க, தொழில் செய்ய அனுமதி உண்டு, ஆனால் தமிழகத்தை ஆள உரிமை இல்லை என்ற வகையில் சீமான் உள்பட பலர் பேசி வருவது தெரிந்ததே. ஆனால் தமிழர் என்பதற்கான அடையாளம் என்ன? என்ற கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை? தமிழ் பேசினால் தமிழரா? எத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தால் அவர் தமிழர்? வேறு மாநிலத்தவர்கள் தமிழகத்தில் பல வருடங்கள் வாழ்ந்தால் அவர் தமிழரா? என்பதற்கான விடை யாரிடமும் இல்லை

இந்த நிலையில் சென்னை அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தமிழர் என்றால் யார்? என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ''தமிழன் என்பது தகுதி அல்ல விலாசம், எங்கிருந்து வந்து தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்தாலும் தமிழரே'
என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கமல் சொல்வதை வைத்து பார்க்கும்போது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் தங்கியுள்ள ரஜினியும் தமிழரே என்றே கருதப்படுகிறது. கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தமிழ் வியாபாரம் செய்யும் போலி தமிழ் ஆர்வலர்கள் ஒருசிலர் என்ன கூறுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :