1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (13:39 IST)

2.0 ரஜினிக்கு மைல் கல்லாக அமையட்டும் - கமல் வாழ்த்து

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்துக் கொண்டிருக்கிறது.
 
இதில் இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், நடிகை ஏமி ஜாக்சன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சண்டை இயக்குநர் சில்வா உள்ளிட்ட குழுவினர் கலந்துக் கொண்டனர். 
 
இந்நிலையில் நடிகர் கமல், 2.0 குழுவினருக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
 
"இந்த படம் நண்பர் ரஜினியின் வாழ்க்கையில் மிகப்பெரும் மைல் கல்லாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் போல் நானுன் நினைக்கிறேன். 2.0 ஷங்கரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என நம்புகிறேன். ஒட்டு மொத்த 2.0 படக்குழுவினருக்கும், எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தனது வாழ்த்துச் செய்தியை ஒட்டுமொத்த குழுவினருக்கும் தெரிவித்திருக்கிறார் கமல் !