வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (15:37 IST)

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: என்னென்ன தகுதிகள்?

துணிகர மற்றும் வீர சாகசம் செய்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக தமிழக அரசுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என்றும் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் ஒருவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழகத்தில் வீர தீர செயல்களை செய்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.