பாகுபாடு காட்டாமல் வேலை: தமிழக அரசுக்கு எக்ஸ் மினிஸ்டர் அப்லாஸ்!
பாகுபாடு காட்டாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டு.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 33,361 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 19,78,621 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 33,361 பேர்களில் 2,779 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் கோவையில் 4,734 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது சென்னையை விட கோவையில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 474 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 22,289 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே கோவையில் கொரோனா பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவை மாவட்டத்தில் பாகுபாடு காட்டாமல் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.