மர்ம உறுப்பில் தங்கத்தை வைத்து கடத்தினார் ரன்யா ராவ்.. பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில், கர்நாடக பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டில் என்பவர், "ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தார். அவர் உடலில் துளைகள் இருந்த இடங்களில் எல்லாம் தங்கத்தை வைத்து கடத்தினார். மர்ம உறுப்பில் கூட தங்கத்தை வைத்து கடத்தி இருக்கலாம்," என்று கூறியுள்ளார்.
"இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயர்களையும் வெளியிடுவேன். தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன். அந்த நடிகை தங்கத்தை எந்தெந்த துளையில் வைத்து மறைத்து கொண்டு வந்தார் என்பதையும் சேர்த்து அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்," என அவர் கூறினார்.
அவரது இந்த பேச்சு அருவருக்கத்தக்கது என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
Edited by Siva