1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (09:15 IST)

இன்று முதல் மேலும் சில துறைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு துறை தொழிற்சாலைகள் கடைகள் போக்குவரத்து ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இன்று முதல் சில துறைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது கோயம்பேடு மற்றும் மாவட்டங்களின் பிற பகுதியில் உள்ள மொத்த காய்கறி, பூ சந்தைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில்லறை வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.
அதேபோல் ரயில்வே விமானம் மற்றும் கடல் துறைசார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை மேற்கொள்ள அனுமதி உண்டு. மேலும் தொலைத்தொடர்பு துறை, அஞ்சல் துறை ஊழியர்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ரத்த வங்கிகளும் இன்று முதல் இயங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னார்வலர்கள்  உணவு வழங்க கோரி இபதிவு செய்து இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.