வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜூலை 2022 (12:55 IST)

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: - புலனாய்வு குழுவில் மேலும் 56 காவலர்கள்!

Kallakuruchi
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணை குழுவில் மேலும் 56 காவல்துறையினர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் தற்கொலைதான் என்று உறுதி செய்யப்பட்டது
 
இதனையடுத்து நேற்று கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 56 போலீசார்களை டிஜிபி சைலேந்திரபாபு நியமித்துள்ளார்.
 
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, பெரம்பலூரை சேர்ந்த எஸ்.ஐ.க்கள், தலைமை காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த வழக்கு மிகவும் சுறுசுறுப்பாக விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறதே.