நடிகர் அர்ஜூனின் தாயார் காலமானார் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அர்ஜூன். இவர் தற்போது தனது மகளை வைத்து கன்னடத்தில் ஒரு படம் இயக்கி வருகிறார்.
அதனால்,தமிழில் அவர் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், அர்ஜூனின் அமா லட்சுமி தெய்வம்மா இன்று தனது 85 வயது காலமானார்.
இவர் மைசூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு அர்ஜூன் உள்ளிட்ட 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் கன்னட சினிமாவில் பிரபல இயக்குனர் ஆவார். இவரது கணவர் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஆவார்.
நடிகர் அர்ஜூனின் தாயார் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.