செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (08:14 IST)

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் ஒப்படைப்பு: கதறியழுத பெற்றோர்

student body
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் ஒப்படைப்பு: கதறியழுத பெற்றோர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த பதினோரு நாட்கள் கழித்து அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது
 
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் சடலத்தை 11 நாட்களுக்கு பின்னர் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
மாணவியின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுத காட்சி காண்போரை நெஞ்சுருக செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியின் உடலுக்கு அமைச்சர் சிவி கணேசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதய சூரியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
 
 கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடல் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் என்ற கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன