தொடர்புடைய செய்திகள்
- நான் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் – பாடகி எல் ஆர் ஈஸ்வரி கருத்து!
- கொரோனாவால் குண்டாகி ஆளே மாறிய தமன்னா – சமீபத்திய புகைப்படம்!
- நவம்பர் மாதம் மட்டும் புது படம் ரிலீஸ… தயாரிப்பாளர்கள் புதிய அறிவிப்பு!
- மோசமான பக்கவிளைவுகள்… கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்திய நாடு!
- சித்த மருத்துவர் தணிகாசலம் மீதான குண்டர் சட்டம் ரத்து! நீதிமன்றம் அதிரடி!
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபுவுக்கு கொரோனா உறுதி!
சமீபத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அதிமுக எம் எல் ஏ பிரபுவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் அதிமுக கட்சிக்காக போட்டியிட்டு 2016 ஆம் அனடு சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவி ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். அது மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்ப நீதிமன்றம் வரை சென்று கணவன் மனைவி சேர்த்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இப்போது பிரபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் காய்ச்சலுடன் இருந்துவந்தார். அதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
