திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:56 IST)

கொரோனாவால் குண்டாகி ஆளே மாறிய தமன்னா – சமீபத்திய புகைப்படம்!

நடிகை தமன்னா கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து உடல் பருமன் அதிகமாகி குண்டான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நாட்கள் சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு பிறகு அவர் உடல் எடை அதிகமாகி விட்டதாகவும் அவர் உடற்பயிற்சிகளைக் கைவிட்டதே அதற்குக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்திய அவரின் புகைப்படங்கள் இதை உறுதிப் படுத்து போல உள்ளன.