1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kallakurichi illicit alcohol one more dead

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: மேலும் ஒருவர் பலி.. உயிரிழப்பு 66 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஏற்கனவே 65 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியாகிவிட்டதை அடுத்து உயிரிழப்பு 66 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணா புரம் பகுதியைச் சேர்ந்த 229 பேர் கடந்த ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 65 பேர் வரை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 மேலும் பலர் தொடர் சிகிச்சையிலிருந்து வந்த நிலையில் இன்று சிவராமன் என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 என்று உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பெற்று வரும் சிலர் குணமாகி வருவதை அடுத்து இனிமேல் உயிரிழப்பு ஏற்படாது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
4500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.. அதிர்ச்சி தகவல் அளித்த டாக்டர் ராமதாஸ்..!