ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2024 (18:22 IST)

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ வேண்டும்.. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ வேண்டாம்.. திருமாவளவன்

Thirumavalvan
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறுகிறார், அதனை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ வேண்டாம் என்று கூறுகிறார், இங்கு ஒரு பதில் அங்கு ஒரு பதில் பேசுகிறார் என திருமாவளவன் குறித்து பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
 
மேலும் ஸ்காட்லாந்துக்கு நிகரான சுதந்திரத்தை நமது காவல்துறைக்கும் வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்.
 
மேலும் சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுகிறார்கள் என்றும், தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்றும், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், அதனை போக்க கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். 
 
மேலும் நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங், ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என  சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவித்த பிறகு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.
 
Edited by Mahendran