திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (10:56 IST)

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு!

கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பல இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தில் பட்டாசு கடை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு சங்கராபுரம் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தால் கடை தீப்பற்றி எரிந்தது.

இதனால் அக்கம் பக்கமிருந்த மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.