திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (15:45 IST)

மீண்டும் விவசாயியை மோதிய பாஜகவின் கார்! – அரியானாவில் பரபரப்பு!

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் போல அரியானாவிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் மத்திய அமைச்சர் வருகையின்போது போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பு குறைவதற்குள் அரியானாவில் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அரியானா மாநிலத்தில் விவசாயிகள் பேரணி நடத்தியபோது அவ்வழியாக சென்ற அம்பாலா தொகுதி பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் கார் மோதியதில் விவசாயி ஒருவர் காயமடைந்துள்ளார். இதை தொடர்ந்து விவசாயிகள் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.